புதுச்சேரியில் விங் கமாண்டர் அபிநந்தன் 341 கிலோ பிரம்மாண்ட சாக்லேட் கேக் தயாரிப்பு

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை கௌரவிக்கும் நோக்கில் புதுச்சேரியில் 341 கிலோ பிரம்மாண்ட சாக்லேட் கேக் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

 

புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் புத்தாண்டு விழாவிற்காக பிரம்மாண்ட உருவங்களில் சாக்லேட் கேக்குகளை வடிவமைத்து வாடிக்கையாளர்கள் பார்வைக்கு வைப்பது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு விமான படையின் கமாண்டர் அபிநந்தன் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.

 

இதற்காக பெல்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாக்லெட் பொருட்களை கொண்டு நிறுவன ஊழியர் ராஜேந்திரன் 124 மணி நேரம் செலவிட்டு 341 கிலோ எடையில் உருவாக்கியதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

 

மகாத்மா காந்தி, சுதந்திர தேவி சிலை, மிக்கி மவுஸ், அப்துல்கலாம் போன்ற பல சிலைகளை உருவாக்கி பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்ததாகவும், தற்போது வீரத்தின் வாயிலாக நாட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கமாண்டர் அபிநந்தனுக்காக சாக்லேட் சிலை வைத்துள்ளது குறித்து வாடிக்கையாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Leave a Reply