குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பிரச்சாரம்! பாஜக கண்டனம்

இந்தியாவில் இருந்து யாரையும் வெளியேற்றுவது குடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கமல்ல என பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகளை கண்டித்து, மதுரை முனி சாலையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்த குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாட்டுக்காக போராடவில்லை என்றும் ஓட்டுக்காக போராடி வருகிறார் என்றும் அவர் விமர்சித்தார்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பொய் பிரச்சாரத்தை நம்பாமல் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜல்லிக்கட்டு முதல் குடியுரிமை மசோதா வரை தமிழகத்தில் பிரதமருக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெறாது எனவும் கூறினார்.


Leave a Reply