இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் பகுதியில் இராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 பெண்கள், ஒரு சிறுவன், 3 ஆண் களை பிடித்தனர். விசாரணையில்,திரிகோணமலை வெருகல் முகத்துவாரம் உதயகுமார் 40, திரிகோணமலை மூதூர் 7ஆம் வட்டாரம் செல்ல சுதாகரன் 39, இவரது மனைவி சந்திரமதி 36, இவர்களது மகன் ஹரீஸ்கரன் 10,யாழ்ப்பாணம் வேலனை சதீஷன் 41, இவரது மனைவி டிலக்சனா 30 ஆகியோர் என தெரிய வந்தது.
2012 ஆம் ஆண்டு அகதிகளாக தமிழகம் வந்து சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கி இருந்தது தெரிந்தது. தலா ரூ.10 ஆயிரம் கொடுத்து மர்மப் படகில் இலங்கைக்கு தப்ப முயற்சி செய்த இவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த வங்கி கணக்கு புத்தகங்கள் பாஸ்போர்ட், இலங்கை அரசு அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர்.