இராமநாதபுரம் அருகே கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அறிய வகை கடற்பசு

இராமநாதபுரம் வன உயிரின சரகத்திற்கு உட்பட்ட அழகன்குளம் அருகே ஆனந்தபுரம் கடற்கரை பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடற்பசு (ஆண்) இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

 

வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் தகவல்படி, இராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் அசோக்குமார், மாவட்ட வன அலுவலர் அருண்குமார், உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம், வனச்சரக அலுவலர் சு. சதீஷ் ஆகியோர் ஆனந்தபுரம் விரைந்தனர்.

 

அங்கு இறந்து கரை ஒதுங்கிய 3.15 மீட்டர் நீளம் ,1 மீட்டர் அகலம், 2 மீட்டர் சுற்றளவு கொண்ட 35 வயது, 530 கிலோ எடை கொண்ட கடற்பசுவை மீட்டனர். கடலில் உள்ள இலைகள் உண்டதால் இறந்திருக்கலாம் என உடற்கூறு ஆய்வில் தெரிந்தது. இதனையடுத்து வாலாந்தரவை கால்நடை மருத்துவர் நிஜாமுதீன் தலைமையில் உடற்கூறு ஆய்வுக்கு பின் புதைக்கப்பட்டது.

இறந்த கடற்பசு உடற்கூறு ஆய்வின்போது, இராமநாதபுரத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பயிற்சி வனச்சரக அலுவலர்கள் 13 பேர், தொண்டி பகுதியில் வன உயிரின ஆய்வில் ஈடுபட்டுள்ள இந்திய வன உயிரின ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்துகொண்டனர்.


Leave a Reply