இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்திவரப்பட்ட 189 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் சுமார் 6.5 கிலோ தங்கத்தை வைத்து இருப்பதாகவும் அதனை வாங்கி வருமாறு ஒரு பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மற்றும் புலிப்படை கணேசன் ஆகியோருக்கு கூறியுள்ளார்.
இதனையடுத்து பணத்தை வாங்கி வந்த கும்பல் சம்பந்தப்பட்டவர்களுடன் ஒப்படைக்காமல் தலைமறைவாகி விட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் சந்தேகப்படும்படியாக சாலையில் நின்றிருந்த இரண்டு கார்களை சோதனை செய்தபோது அதில் 189 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வாகனங்களில் இருந்த மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்கள் இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய கும்பல் என்பதும் கடத்தி வந்த தங்க கட்டிகளை நகைகளாக மாற்றி விட்டது தெரியவந்தது. கும்பலை சேர்ந்த மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.