காதலனுக்காக பேயாக நடித்த பெண்! காதலனை மறக்க சொல்லி பிரம்பால் அடித்த திருநங்கை!

காதலனை மறக்க முடியாமல் பேய் பிடித்தது போல் நாடகமாடிய இளம்பெண்ணை பேய் விரட்டுவதாக கூறி திருநங்கை ஒருவர் பிரம்பால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

 

எனினும் காதலனை மறக்க முடியாமல் தவித்த இளம்பெண் பெற்றோரை ஏமாற்ற முடிவு செய்துள்ளார். அதன்படி பேய் பிடித்தது போல் முடியை விரித்தபடி நடிக்கத்தொடங்கினார். இதனால் அச்சம் அடைந்த பெற்றோர் கல்லங்குறிச்சி மதுரை காளியம்மன் கோவிலில் அருள்வாக்கு கூறும் திருநங்கை மதுரையிடம் அழைத்து சென்றுள்ளனர்.

 

அங்கு பேய் விரட்டுவதாக கூறி தலைமுடியை இழுத்தும், பிரம்பால் அடித்தும் இளம்பெண்ணை திருநங்கை துன்புறுத்தினார். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாத இளம்பெண் தனக்கு பேய் பிடிக்கவில்லை என்றும் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அதனால் பெற்றோருக்கு பயந்து பேய் பிடித்தது போல் நடிப்பதாகவும் உண்மையை கூறினார்.

 

இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காதலனை மறந்து விடுவதாகவும் அவரிடம் இனி பேச மாட்டேன் எனவும் சூடத்தை அனைத்து வாக்குறுதி அளிக்கிறார் அந்த இளம்பெண். சத்தியம் செய்துவிட்டு அதை மீறினால் ரத்த வாந்தி எடுத்து மரணமடைய நேரிடும் எனவும் அந்த இளம்பெண்ணை எச்சரித்து அனுப்புகிறார் அந்த திருநங்கை.


Leave a Reply