ஃபாஸ்ட் டேக் முறைக்கு மாறி வரும் வாகனங்கள்

சேலம் மாவட்டத்தில் பெரும்பான்மையான வாகனங்கள் பாஸ்ட் டேக் முறைக்கு மாறியதால் சுங்கச்சாவடியை விரைவாக கடக்க முடிவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் அட்டை வழங்குவதற்காக சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இதனால் வாகன ஓட்டிகள் எங்கும் அலையாமல் உரிய ஆவணங்களை கொடுத்து டோல்கேட்டில் பாஸ்ட் டேக் அட்டையை பெற முடிகிறது. மேலும் ஓமலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் அட்டையை பெற்ற வாகனங்கள் எட்டு வாயில்கள் வழியாக அனுமதிக்கப்படுகின்றன.

 

இதனால் மூன்று நிமிடங்களில் வாகனங்கள் சுங்க சாவடியை கடந்து செல்கின்றன. பாஸ்ட் டேக் முறை காரணமாக சுங்கச்சாவடியில் காத்திருக்கும் நேரம் மிச்சமாகி உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply