--- --:--:-- --

நித்தியானந்தாவிற்கு உதவிய பெண் தொழிலதிபர்

4

சாமியார் நித்யானந்தாவின் பிடியில் குஜராத் பெண் தொழிலதிபர் ஒருவர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமறைவாக உள்ள நித்யானந்தா எங்கு உள்ளார் என கண்டுபிடிக்க முடியாமல் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்களை திணறி வந்தாலும் தினம்தோறும் வீடியோ வெளியிடுவதை மட்டும் அவர் நிறுத்திய பாடு இல்லை.

 

தற்பொழுது நித்யானந்தாவைப் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நித்யானந்தாவின் பிடியில் குஜராத்தை சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் பெண் அதிபர் ஒருவர் சிக்கியிருப்பதாக பரவியுள்ள தகவல்தான் அந்த பரபரப்பில் பின்னணி.

 

குஜராத்தை சேர்ந்த பெண் தொழிலதிபரான மஞ்சுளா புஜாரா என்ற பெயரில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றார். தீவிர சிவபக்தியான இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெங்களூரு வந்திருந்த போதுதான் அங்கு உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவை சந்தித்துள்ளார்.

 

அதுமுதல் நித்யானந்தாவின் தீவிர பக்தையாக மாறியுள்ளார் மஞ்சுளா. பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மஞ்சுளாவிடம் இருப்பதை அறிந்த நித்யானந்தா அகமதாபாத்தில் ஆசிரமம் அமைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவரிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மஞ்சுளாவும் அகமதாபாத்திலிருந்து தனது சிபிஎஸ்இ பள்ளி வளாகத்திலேயே நித்தியானந்தாவிற்கு ஆசிரமத்தை அமைத்து கொடுத்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள ஜனார்த்தன சர்மாவின் மகள் உட்பட பலர் தங்க வைக்கப்பட்டிருந்ததாக சர்ச்சைகளும் எழுந்தன.

 

பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்கு பின்பு நித்யானந்தா அகமதாபாத் ஆசிரமத்தில் தான் சில காலம் தங்கி இருந்துள்ளார். ஆனால் ஜனார்த்தன சர்மாவின் மூலம் மீண்டும் பிரச்சினை வெடித்ததால் அங்கிருந்து தப்பி உத்திரபிரதேசம் வழியாக நேபாளம் சென்று தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

 

ஈகுவடார் அருகே தீவு ஒன்றை வாங்கி கைலாசம் எனும் நாட்டை உருவாக்க உள்ளதாக அறிவித்த நித்யானந்தாவுக்கு 5 முதல் 6 கோடி வரை மஞ்சுளா நிதி உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பாலியல் வழக்குகளில் சிக்கிய நித்யானந்தாவை இன்றளவும் சிவபெருமானின் அவதாரம் என மஞ்சுளா தீவிரமாக நம்பிக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இது அவர் தனிப்பட்ட விருப்பம் என்றாலும் ஆசிரமத்திற்கு வழங்கிய இடம் சட்டத்திற்குப் புறம்பான இடம் என குஜராத் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தனது பள்ளியை முறைகேடாக ஆவணங்களை தயார் செய்து சிபிஎஸ்சி அந்தஸ்திற்கு உயர்த்தியது ஆகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon