சரியான நேரத்தில் வராத பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சரியான நேரத்தில் பேருந்துகள் வராததால் மாணவர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சிலால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் மாணவ, மாணவிகள் கும்பகோணத்தில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ஆனால் கல்லூரிகளுக்கு செல்லும் நேரத்தில் பேருந்துகள் வரவில்லை எனக் கூறி மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் அரசு பேருந்து ஒன்று நிற்காமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் சாலையில் கிடந்த கட்டையால் பேருந்து கண்ணாடியை உடைத்தனர். பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

 

அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மாணவர்கள் சமாதானம் அடைந்து வேறு பேருந்தில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். உடைந்த கண்ணாடிக்குபதிலாக புதிய கண்ணாடியை பெறுவதற்கான செலவை ஏற்றுக் கொள்வதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


Leave a Reply