பன்றி வளர்க்கும் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை! சிறுவன் கொலை
பன்றி வளர்க்கும் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் 12 வயது சிறுவனை கொன்று புதைத்ததாக திருச்சியில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியமங்கலம் மேல் அம்பிகா புரத்தை சேர்ந்த அப்துல் வாகித் என்ற சிறுவனை கடந்த 3 ஆம் தேதி முதல் காணவில்லை.
அது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தகவல் திரட்டிய காவலர்கள் அதிமுக பிரமுகர்கள் கயல்விழி சேகர் என்பவரின் மகன்கள் முத்துக்குமார், இளவரசி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதில் பன்றி விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் சிறுவன் அப்துல் வாகிப்பை கூட்டாளிகளை வைத்து மிரட்ட சொன்னதாக அவர்கள் ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கூட்டாளிகள் தாக்கியதில் உயிரிழந்த சிறுவனை அப்பகுதியில் உள்ள 15 அடி ஆழத்தில் குப்பைத்தொட்டியில் புதைத்துள்ளனர். இதையடுத்து அரசு அதிகாரிகள் முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுத்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




