--- --:--:-- --

பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த நபரை பெண் போலீஸ் சரமாரியாக அடிக்கும் வீடியோ காட்சி

11

கான்பூரில் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த நபரை பெண் போலீஸ் ஒருவர் தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி சரமாரியாக அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கான்பூரில் பள்ளி மாணவிகளை சிலர் ஈவ்டீசிங் செய்வதாக புகார் எழுந்துள்ளது .

 

இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளி அமைந்துள்ள பகுதியில் ஈவ்டீசிங்கை தடுக்கும் குழுவை சேர்ந்த பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளி செல்லும் மாணவிகளை கிண்டல் செய்த ஒருவரை அங்கிருந்த பெண் கான்ஸ்டபிள் தனது ஷூவை கழற்றி சரமாரியாக தாக்கினார்.

 

மாணவிகளை கிண்டல் செய்த நபருக்கு பொதுமக்கள் முன்னிலையில் பெண் கான்ஸ்டபிள் நடத்திய பூஜையை அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன் பெண் கான்ஸ்டபிள் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

 

உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்ததையடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக உத்தரப்பிரதேசத்தில் செயல்படும் ஆண்டி- ரோமியோ குழுவினர் தங்கள் செயல்பாட்டில் தீவிரப்படுத்தியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon