ஆபாச படம் பார்ப்பவர் பட்டியல் கிடைத்தவுடன் நடவடிக்கை

திருநெல்வேலியில் குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பவர்களின் பட்டியல் கிடைத்தவுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார். பாரதியாரின் பிறந்த நாளையொட்டி நெல்லையில் உள்ள பாரதியார் படித்த மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் சரவணன் கலந்துகொண்டார்.

பின்னர் பேசிய அவர் காவல்துறையினரை பெயரை பயன்படுத்தி பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் நெல்லையில் ஐந்தாயிரம் பெண்கள் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.


Leave a Reply