“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” – மத்தியமைச்சர் அஷ்வினி குமார்
வெங்காயம் சாப்பிடாததால் அதன் விலை உயர்வு குறித்து தமக்கு தெரியாது என மத்திய குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார். நான் சைவ உணவு உண்பவன் என்றும் நான் வெங்காயத்தை ருசித்தது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். என்னைப் போன்ற ஒரு நபர் வெங்காயத்தின் விலை பற்றி எப்படி அறிந்து கொள்வார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




