திருவாடானை குடித்தது விட்டு வாகனம் ஓட்டிய 9 பேரு தலா 10 ஆயிரம் அபராதம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி பகுதிகளில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சிலம்பரசன் (25) மல்லனூர் , ஜோன் ( 21), கேப்டன் பிரபாகரன் (22) நரிக்குடி, நாகூர் கனி (30) M. V பட்டணம், சதீஸ்குமார் (30) தொண்டி புதுக்குடி, காளியப்பன் (35), முத்துமாரி (38) தொண்டி, முருகன் (32) காடாங்குடி உள்பட 9 க்கும் மேற்பட்டவர்கள் மீது பல்வேறு தேதிகளில் வாகன சோதனையிட்ட போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கு பதிவு செய்ய பட்டு வந்த நிலையில் இவர்களை தொண்டி காவல் நிலையத்தார் திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

இவர்கள் அனைவருக்கும் நீதிபதி பாலமுருகன் தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அதனை தொடர்ந்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் அனைவரும் தண்டனை தொகையை செலுத்தினார்கள்.


Leave a Reply