வெப் சீரிஸ் மூலம் அடுத்த சுற்றுக்கு தயாரான நடிகை மீனா

வெப் சீரிஸ் தொடரில் முதன் முறையாக நடிக்கவிருப்பதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்த இணைய தொடருக்கு கரோலின் காமாட்சி என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

 

இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையில் அதிகாரியாக பணியாற்றும் காமாட்சி மற்றும் பிரஞ்சு நாட்டின் உளவு துறையில் அதிகாரியாக பணியாற்றும் கரோலின் ஆகியோரை பற்றியதே இந்த கரோலின் காமாட்சி தொடரின் கதை களம் என்று தெரிவித்தார்.


Leave a Reply