நின்று கொண்டிருந்த ரயிலில் இருந்து கசிந்த டீசலை பிடிக்க அலைமோதிய மக்கள் கூட்டம்
கர்நாடகாவில் நின்று கொண்டிருந்த ரயிலில் கசிந்த டீசலை பிடிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஹவேரி மாவட்டத்திலுள்ள பகுதியில் சென்று கொண்டிருந்த ரயிலில் திடீரென எரிபொருள் டேங்கில் இருந்து டீசல் கசிந்தது. இதை கவனித்த ஊழியர்கள் உடனடியாக ரயிலை நிறுத்தி மையத்திற்கு வேறு என்ஜின் கேட்டு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த காரணத்தை அறிந்த அப்பகுதி மக்கள் குடம் தண்ணீர் பாட்டில் வீட்டிலிருக்கும் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டுவந்து கசியும் டீசலை பிடித்தனர். அதிக மக்கள் கூடியதால் அங்கு கூட்டம் அலைமோதியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




