விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்பிரமணியனை நேரில் பாராட்டிய முதல்வர்

நிலவில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் கிடைக்கும் இடத்தை கண்டறிந்த பொறியாளர் சண்முகசுப்ரமணியனை முதல்வர் பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

 

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-2 மூலம் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குவதற்கு இரண்டு கிலோமீட்டர் இருந்தபோது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

 

அதனை இஸ்ரோவும், நாசாவும் தேடி வந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த சண்முகம் சுப்பிரமணியன் என்பவர் நாசாவின் புகைப்படங்களை ஆராய்ந்து நிலவில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தார்.

 

இதற்காக முதல்வர் பழனிசாமி பசுமை வழி சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு சுப்பிரமணியத்தை அழைத்து பாராட்டு தெரிவித்தார்.


Leave a Reply