அடைமழையில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது போன்று குளிர் வீசும் தென்கிழக்கு சீனாவில் உள்ள ஐஸ் ஹோட்டலுக்கு படையெடுத்து வருகிறார்கள் சுற்றுலாப்பயணிகள்.
ஐஸ் ஹோட்டலில் தங்குவது என்பது மிதவெப்ப நாடுகளில் வசிப்பவர்களுக்கு அத்துணை எளிதில் வாய்க்காத ஒன்று. ஆனால் குளிர் பிரதேசங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதற்காக இவ்வாறான ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளன.
அப்படி தென்கிழக்கு சீனாவில் கட்டப்பட்டிருக்கும் ஹோட்டலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனாவின் ஒரு மாகாணத்திலுள்ள கோஹே நகராட்சியில் கடந்த ஆண்டு ஐஸ் ஹோட்டல் திறக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு வசதிகள் கொண்ட இந்த ஹோட்டலின் அறையின் வெப்பநிலை மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் ஆக கண்காணித்து பராமரிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று ஹாயிலுங் ஜியாங் மாகாணத்தில் கடந்த ஆண்டின் இறுதியில் கட்டப்பட்ட ஐஸ் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பயணிகளை கவர்ந்து வருகின்றன .பயணிகளை கவருவதற்காக ஜப்பான், கனடா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளும் ஐஸ் ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஜியான் மாகாணத்திற்கு வரும் பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விதவிதமான வடிவமைப்புகளில் விடுதிகள் கட்டப்படுவது உண்டு என்றாலும் இவ்வாறான ஐஸ் ஓட்டல்கள் கட்டப்படுவது சுற்றுலா பயணிகளுக்கு புது அனுபவமே.