தினமும் 3 முறை பல்துலக்கினால் இதய நோயை தவிர்க்கலாம்
தினசரி மூன்று முறை பல் துலக்குவதன் மூலம் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகளை குறைக்கலாம் என ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள பெண்கள் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
40 முதல் 79 வயது வரை உள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இது குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு நாளில் இரண்டு முறைக்கு மேல் பல் துலக்குவதால் இதயத் துடிப்பு சீராவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்புகள் சேராமல் தடுக்கப்படுவதால் மாரடைப்பு உள்ளிட்ட இதய கோளாறுகள் 10 சதவீதத்திற்கு மேல் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பற்கள் நாக்கு உள்ளிட்ட ஒட்டுமொத்த வாயின் உட்பகுதியில் தூய்மையால் இதயத்தின் தூய்மை மேம்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தினசரி மூன்று முறை பல் துலக்குவதால் வாயில் பாக்டீரியாக்களின் சேர்க்கை குறைந்து ரத்தத்தில் பாக்டீரியாக்கள் வளர்ப்பது பெருமளவு தடுக்கப்படும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




