மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் : எம்பி கனிமொழி

உள்ளாட்சி தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதிக்குட்பட்ட முத்தையா புறத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

 

மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகளும், அமைச்சர்களும் சந்திக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

 

உள்ளாட்சித் தேர்தலில் பல குழப்பங்கள் உள்ளதாக தெரிவித்த அவர்கள் அதனை சரிசெய்து விட்டு தேர்தலை அறிவித்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.


Leave a Reply