மேட்டுப்பாளையத்தில் பங்களா வீடு ஒன்றின் சுற்றுச்சுவர் கருங்கல்லால் கட்டப்பட்டது. அந்தச் சுற்று சுவரின் உயரம் 20 அடி ஆகும். 80 அடி நீளம் கொண்ட அந்த கருங்கல் சுற்றுச் சுவரின் அகலம் 2 அடி ஆகும்.
தொடர் மழையின் காரணமாக மூன்று ஆள் உயரம் கொண்ட அந்த சுவரின் ஒரு பகுதி அருகில் இருந்த மண் வீடுகள் மீது அதிகாலை மூன்றே முக்கால் மணி மீது விழுந்தது. அதிக எடை கொண்ட கருங்கல் சுவர் விழுந்ததால் மண்ணால் கட்டப்பட்ட ஓட்டு வீடுகள் தரைமட்டமாகின.
கனமழை பெய்து வந்ததாலும் அனைவரும் உறங்கும் நேரம் என்பதாலும் அருகில் இருந்த வீடுகளில் இருப்பவர்களுக்கே விபத்து நடந்து ஒன்றரை மணி நேரம் கழித்துதான் தெரியவந்திருக்கிறது .சுற்றுச்சுவர் விழுந்ததால் தரைமட்டமான அந்த வீடுகளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் உயிரிழந்தனர்.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
வருங்கால முதல்வரே.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்..!
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்
அமைச்சர் பொன்முடி பேச்சு.. வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!