60 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் தற்கொலை முயற்சி!

மதுரை அருகே 60 வயது பெண்மணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே மலைச்சாமி புரத்தை சேர்ந்தவர் சண்முகவள்ளி.

 

60 வயதான இவர் கால்நடைகளை மேய்த்து விட்டு தனியாக வீடு திரும்பும்போது வரும் வழியில் நின்று கொண்டிருந்த குருவி என்ற இளைஞர் சண்முகவள்ளிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே தலையில் கல்லால் தாக்கி உள்ளார்.

 

இதில் காயமடைந்த சண்முகவள்ளி அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே காவல்துறைக்கு பயந்த இளைஞர் குருவி அருவாள் மழையால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

பின்னர் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த ஒத்தகடை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply