திருவாடானை வேளாண்மை துறை சார்பில் 50 விவசாயிகள் பட்டறிவு பயணம் சென்றனர்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என 50 பேரை திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் வேளாண் அறிவியல் நிலையம் அருப்புக் கோட்டைக்கு இரண்டு வேன்களில் அழைத்து சென்றுள்ளனர்.

இந்த பயணத்தின் மூலம் காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, மற்றும் மாடித்தோட்டம் பற்றியும் வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள ஏதவாக இருக்கும் என்றும் அதற்கு முன்னதாக இதற்கான கூட்டம் வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுத்து கூறினார். இந்த விவசாயிகள் பட்டறிவு பயணத்தின் ஏற்பாடுகளை வட்டார தொழில் துட்ப மேலாளர் சூரியா உதவி வேளாண்மை அலுவலர் ஏற்பாடு செய்திருந்தார்.


Leave a Reply