தொடர்ந்து சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் – பளார்..பளார் என அறைவிட்ட பெண்!
ஆந்திர மாநிலத்தில் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை பெண் ஒருவர் அடித்த காட்சி வெளியாகியுள்ளது. கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கொண்ட பள்ளி என்ற பகுதியில் பெண் ஒருவர் எங்கு சென்றாலும் அதே பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து வந்து சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
பெண் கண்டித்தும் இளைஞர் தனது போக்கை மாற்றிக் கொள்ளாத நிலையில் பொறுமையை இழந்த அந்தப் பெண் இளைஞரை பிடித்து பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கினார். பின்னர் அந்த இளைஞரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




