துருக்கி மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து சுமார் 17 ஆயிரம் டன் வெங்காயம் இந்த மாத இறுதியில் வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெங்காய சாகுபடி அதிகம் உள்ள மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெங்காயத்திற்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை கிலோ 100 ரூபாய்க்கு மேல் சென்றது. விலை உயர்வை கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டை சமாளிக்கவும் வெளிநாடுகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது .
துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு கொள்முதலானரால் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் டிசம்பர் இறுதி மற்றும் ஜனவரி முதல் வாரத்திற்குள் துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன்னும், எகிப்திலிருந்து 6090 டன்னும் வெங்காயம் இந்தியாவிற்கு வந்து சேரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.