--- --:--:-- --

சக ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறுமாறு தூண்டிவிட்ட தலைமை ஆசிரியர்

13

தர்மபுரி அருகே சக ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறுமாறு பள்ளி மாணவியை தலைமை ஆசிரியர் தூண்டி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை, காமராஜர் நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.

 

இங்கு பணிபுரியும் ஆசிரியர் ரமேஷ்குமார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் ஆசிரியர் ரமேஷ் குமார் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு தலைமை ஆசிரியர் சிவகாமி சுந்தரி மாணவியை தூண்டி விட்டது தெரியவந்தது.

 

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் தலைமை ஆசிரியை சிவகாமசுந்தரியை இடமாற்றம் செய்ய வேண்டுமெனவும் இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனவும் கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 

தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தியதில் தலைமை ஆசிரியர் சிவகாமசுந்தரி ஆசிரியர் மீது பொய்யான புகார் கூற சொன்னதாகவும், இல்லை என்றால் மதிப்பெண்களைக் குறைத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை சிவகாமசுந்தரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon