நீட் தேர்வு – இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
2020 ஆம் ஆண்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு இன்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது. இதற்கான கட்டணமானது புதுப்பிரிவினர் ஆயிரத்து 500 ரூபாயும் மற்றும் ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ஆயிரத்து 400 ரூபாயும், எஸ்சி எஸ்டி பிரிவினர் 800 ரூபாயும் செலுத்த வேண்டும்.
ஜனவரி ஒன்றாம் தேதி வரை தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




