--- --:--:-- --

பொள்ளாச்சி அருகே சாலையோரம் மழைநீர் தேங்கியிருந்த குழியில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி

8

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சாலையோர மழை நீர் தேங்கி இருந்த குழியில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் உறவினர் திருமணத்தில் பங்கேற்க பொள்ளாச்சி வழியாக தாராபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

 

சுந்தர கவுண்டனூர் எனும் இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மழைநீர் தேங்கி இருந்த குழுவில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் குழியிலிருந்து காரை மீட்டனர்.

 

இந்த விபத்தில் நீரில் மூழ்கிய சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon