கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடி கட்டணம் வசூல் மையத்தின் மீது மோதியது. இதில் கட்டண வசூல் மையம் 5 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.

 

முன்னால் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மினி லாரி மோதியதில் கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னப்பன் திருமலை நகரை சேர்ந்த பரிமலா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

 

கட்டண வசூல் மையத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த கிருஷ்ணகிரி காவலர்கள் மினி லாரி ஓட்டுநர் சிவக்குமாரை கைது செய்துள்ளனர்.


Leave a Reply