திருவாடானை அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி மீது மோதியவர் மீது வழக்கு
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்க தக்க மூதாட்டி, உதவி பொறியாளர் மின்சார வாரியம் அருகில் சென்று கொண்டிருந்தார் .
அப்போது திணையத்தூர் அருகே உள்ள கருங்கவயல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் கண்ணன்(31) என்பவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்ற போது எதிர்பாராத விதமாக மூதாட்டி மீது மோதியதில் மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிராமநிர்வாக அலுவலர் ராஜேஸ்(35) அளித்த புகாரின் பேரில் திருவாடானை காவல் நிலையத்தார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




