ரஜினிகாந்தை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்

கேரளாவில் முதல்வரிடம் வெள்ள நிவாரண நிதி கொடுத்து கால்களால் செல்பி எடுத்த மாற்றுத் திறனாளி இளைஞர் பிரணவ் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். கேரளாவை சேர்ந்த இளைஞரான பிரணவ் இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி.

 

எனினும் கால்களாலேயே தனது பணிகளை செய்துகொள்ளும் திறமை கொண்டவர் பிரணவ். சில நாட்களுக்கு முன்பு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண நிதிக்கான காசோலையை அவர் கொடுத்தார்.

 

கால்களால் கொடுத்த காசோலையை தனது கைகளால் பெற்றுக் கொண்டார் முதல்வர். பினராயிவுடன் கால்களால் செல்பியும் எடுத்துக் கொண்டார் பிரணவ். இந்தப் புகைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இதே பிரணவ் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து உள்ளார்.

தன்னை சந்திக்க விரும்பியதை அறிந்த ரஜினிகாந்த் அவரை சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு வரவழைத்தார். பிரணவை வரவேற்ற ரஜினிகாந்த் அவரது காலை பிடித்து கை குலுக்கினார். ரஜினிகாந்துக்கு ரஜினிகாந்தின் படத்தையே பரிசளித்த பிரணவ் நீண்ட நேரம் உரையாடினார்.

 

பிரணவ்க்கு ரஜினிகாந்த் பாபா படத்தை பரிசளித்தார். பின்னர் ரஜினிகாந்துடன் இணைந்து தனது பாணியில் செல்போனை கால்களால் பிடித்து செல்பி எடுத்து மகிழ்ந்தார் பிரணவ்.


Leave a Reply