ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் 6 பேருக்கு இடைக்கால ஜாமீன்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்புடைய நிதித்துறை முன்னாள் அதிகாரிகள் 6 பேருக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

 

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது நிதித் துறையில் பணியாற்றிய சிந்து ஸ்ரீகுள்ளன், பிரதீப் குமார் பகா, பிரபு சக்சேனா, அஜித்குமார் குந்தன், ரவீந்திர பிரசாத், அனு பூசாரி ஆகிய 6 பேரும் ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் செலுத்தி தனிநபர் இடைக்கால ஜாமீன் பெற சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் அனுமதி அளித்தார்.


Leave a Reply