சிவகாசி நகராட்சியின் உயிரிழந்த வருவாய் ஆய்வாளருக்கு பணி மாறுதல் ஆணை வெளியிடப்பட்டிருக்கும் சம்பவம் அரசு அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி நகராட்சி வருவாய் ஆய்வாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த முத்துக்குமரன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் நேற்று நகராட்சி பொது பணி பிரிவின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் பணிமாறுதல் ஆணையில் சிவகாசி நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக முத்துக்குமரன் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு பணிமாறுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியிடப்பட்டுள்ளது.
முத்துக்குமரன் உயிரிழந்து இரண்டு மாதங்களை கடந்திருக்கும் நிலையில் அவருக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டிருப்பது அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.