--- --:--:-- --

கலக்கும் காவல் நிலையம் – கூகுளில் குவியும் ரேட்டிங்

8

உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் போன்றவற்றின் தரம் குறித்து கூகுளில் பொதுமக்கள் ரேட்டிங் கொடுப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு ஸ்டார்களை அள்ளி வழங்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.

 

பொதுவாக காவல் நிலையத்தை பற்றி மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு இருக்கும். அதை போக்க தான் காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அவையெல்லாம் உரிய பலனை கொடுத்ததா என்ற கேள்விக்கு 100 விழுக்காடு ஆம் என்று பதில் கூற முடியாவிட்டாலும், ஆங்காங்கே சில நற்காரியங்கள் நடந்து வருவதை மறுப்பதற்கில்லை. அதன் வெளிப்பாடாகவே சென்னை திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் கிடைத்த பாராட்டை பார்க்கவேண்டியுள்ளது.

 

மூன்றாண்டுகளுக்கு முன்பே திருமுல்லைவாயில் காவல் நிலையத்தை பாராட்டி கமெண்ட்டுகள் பதியப்பட்டு இருந்தாலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 30 பேர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தை பாராட்டி கூகுளில் ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

 

கையூட்டு வாங்காத காவலர்கள், கண்ணியத்துடன் நடத்தும் அதிகாரிகள், தூய்மையாக இருக்கும் காவல் நிலையம் அனைவரும் தங்களது வாழ்வில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று என லோகேஸ்வரன் என்பவர் பதிவிட்டது அதற்கு காரணம்.

 

நள்ளிரவில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் சென்றதால் தான் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்வதாகவும் லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதற்கு நடுவே சில எதிர்மறையான கமெண்ட்டுகள் இருந்தாலும், 5-க்கு 4.2 ஸ்டார் ரேட்டிங் பெற்று கலக்குகிறது திருமுல்லைவாயில் காவல் நிலையம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon