சென்னையில் வங்கி உதவி மேலாளர் ஒருவரே காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ்காரரின் இரு சக்கர வாகனத்தை திருடி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலை மாவட்டத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் அருண்குமார்.
கடந்த 25ஆம் தேதி சொந்த ஊருக்கு புறப்பட்ட அருண்குமார் தனது இரு சக்கர வாகனத்தை கிண்டி காவல் நிலையத்தில் விட்டு விட்டு சென்றுள்ளார். பின்னர் சென்னை திரும்பியதும் இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
ஆனால் இருசக்கர வாகனம் காணாமல் போன நிலையில் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
விசாரணையின்போது தாம்பரம் பகுதியில் உள்ள சிசிடிவி பகுதிகளில் அந்த வாகனத்தை அந்த நபர் எடுத்து செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. தனியார் வங்கி ஊழியர்களும் இருசக்கர வாகனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பதிவு எண் மாற்றப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை திருடி அருண்குமாரை கைது செய்தனர். விசாரணையில் மதுபோதையில் தன்னுடைய வாகனம் என நினைத்து போலீஸ்காரரின் வாகனத்தை எடுத்து சென்றதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.