--- --:--:-- --

மஹாராஷ்டிரா முதல்வர் பதவியிலிருந்து முதல்வர் பாட்னாவிஸ் ராஜினாமா!

1

மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் திருப்பங்கள் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
மும்பையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தனது ராஜினாமா முடிவை தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தார்.

 

ஏற்கனவே துணை முதல்வர் அஜித் பவார் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னவீஸிடம் அளித்திருந்த நிலையில், செய்தியாளர்கள் முன்னிலையில், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர ஃபட்னவீஸும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆளுநர் பகத்சிங் கோஷியாரியிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்கவிருப்பதாகவும் ஃபட்னவீஸ் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon