சபரிமலைக்கு பக்தர்கள் அச்சமின்றி வரலாம்
சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் தமிழக பக்தர்கள் அச்சமின்றி வரலாம் என கேரளாவின் கொச்சி ஐஜி விஜயன் தெரிவித்துள்ளார்.
சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் தமிழக பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கேரளாவின் கொச்சி விஜயன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பம்பையின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி அவர் பழைய ஆடைகளை பம்பை நதியில் விட்டு செல்வதையும் பக்தர்கள் தவிர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்கள் டன் கணக்கில் குப்பைகளாக சேருவதால் அதை உண்ணும் வனவிலங்குகள் உயிரிழந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு பக்தர்களுக்காக சிறப்பான வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் சபரிமலைக்கு எவ்வித அச்சமும் இன்றி வரலாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




