கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு

தொப்பூர் மலைப்பாதையில் கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

காக்கனாம்பாளையத்தை சேர்ந்த சத்தியவாணி என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரது உறவினர்களான அன்புமணி மற்றும் கவிதா மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றனர். அந்தக் கார் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் மலை பாதையில் சென்றுகொண்டிருந்தபோது உடுமலைப்பேட்டைக்கு பஞ்சு லோடு ஏற்றி சென்ற லாரி காரின் பின்பகுதியில் மோதியுள்ளது.

 

இதில் சத்தியவாணி, அன்புமணி, கவிதா மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த கார் ஓட்டுநர் ரமேஷ் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply