விளையாட்டாக டிக்டாக்வீடியோ பதிவிட்ட சிறுமி ஒருவர் ஒரே மாதத்தில் உலக பிரபலமாகி ஆச்சரியப்பட வைத்துள்ளார். இந்தப் புகைப்படத்தில் பார்க்கும் பெண்ணை பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் டிக்டாக் செயலி பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
அமெரிக்காவை சேர்ந்த 15 வயதான சார்லி டி அமீலியா என்ற இந்த சிறுமி டிக்டாக் செயலி மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விரும்பும் பிரபலமாகியுள்ளார். ஒரே மாதத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ள அமீலியா ஆண்கள் அதிகம் விரும்பும் டிக் டாக் பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
மேலும் உலக பிரபலங்களின் பிறந்த நாள் பட்டியலிலும் அமீலியாவின் பெயர் இடம் பிடித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு முதன் முதலாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து அமீலியா கடந்த ஜூன் மாதம் தான் டிக் டாக் செயலியில் இணைந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் குறுகிய காலத்திலேயே தான் பிரபலமாவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை என கூறியுள்ள அமீலியா தான் ஒரு நடனக் கலைஞர் என்பதால் அது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு பார்வையாளர்களை கவர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரை பார்க்க 10 வயது சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை வந்திருந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார். ஆண்கள் பெண்களின் அழகை மட்டுமே விரும்புவதாக கூறும் அமீலியா அதிக அளவிலான பார்வையாளர்களை பெற்று இருப்பதன் மூலம் சர்வதேச பிரபலம் என்ற பெயருடன் பதினைந்து வயதிலேயே பணக்காரர் ஆகும் சந்தோஷத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டிக் டாக் பயன்பாடு பல நேரங்களில் உயிரிழப்பு உள்ளிட்ட விபரீதங்களுக்கு காரணம் ஆகியுள்ள நிலையில் சார்லி டி அமீலியாவின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய இடம் பிடித்துள்ளது.