கனமழையால் தண்ணீரில் முழக்கப்பட்ட கட்டடங்கள்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நீர் நிலைகளுக்குள் கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் தங்களது வரிப்பணம் வீண் ஆவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

மேலூர் அருகே உள்ள அட்டப்பட்டி கிராமத்தில் உள்ள செட்டி குளம் கண்மாய் மற்றும் பிச்சல்குளம் கண்மாய் ஆகியவற்றில் கடந்த 2012ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நாடக கட்டடங்கள் கட்டப்பட்டன.

 

இந்நிலையில் தற்போது பெய்த கனமழையால் கண்மாய்க்கு நீர் நிறைந்து அரசு கட்டடங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. அதேபோல் மின்மாற்றியும் இந்த கண்மாய்க்குள் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Leave a Reply