புகை பிடிக்கும் காட்சியில் ராதிகா சரத்குமார் நடித்ததற்கு நோட்டீஸ்!

புகைபிடிக்கும் காட்சியில் நடித்ததற்காக நடிகை ராதிகா சரத் குமாருக்கு தமிழக மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆரவ் நடிக்கும் மார்க்கெட் ராஜா திரைப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் புகைபிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார்.

 

ஆனால் மக்கள் நல்வாழ்வுத்துறை வகுத்துள்ள விதிகளுக்கு மாறாக புகைபிடிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. படத்தின் விளம்பர போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள புகைபிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடாதது உள்ளிட்ட சில விதிமுறை மீறல்களில் ராதிகா சரத்குமார் ஈடுபட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எனவே உடனடியாக அனைத்து தளங்களில் இருந்தும் இந்த விளம்பரங்களை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்கவும் ராதிகா சரத்குமாருக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply