ஆசிரியர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயமல்ல

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆசிரியர்களின் விருப்ப ஓய்வு விவகாரத்தில் அனைத்து சங்கங்களின் கருத்து கேட்கப்படும் என்றார். நீட் தேர்வுக்காக 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

2021 ஆம் ஆண்டில் நடக்க இருப்பதாக நடிகர் ரஜினி சொன்ன அதிசயம் தற்போது நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு நடந்துள்ளதாக செங்கோட்டையன் கூறினார்.

 

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும், அப்படி சேர்த்தால் பாராட்டி கௌரவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


Leave a Reply