மாபெரும் வெட்கக்கேடு, மாறாத தலைகுனிவு!

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்திருப்பது என்ன பாணி அரசியல் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ள அரசியல் சட்ட நெறிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து குப்பைத்தொட்டியில் வீசி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மறைமுக மிரட்டல் மூலமாக பாஜக ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவின் சித்து விளையாட்டா எனவும் வினவியுள்ளார். ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டிரிப்பதாகவும், இது மாபெரும் வெட்கக்கேடு என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.


Leave a Reply