மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய பெண் மருத்துவர்!

விபத்தை ஏற்படுத்திய பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து பெண் ஒருவர் குடும்பத்துடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அய்யம்பெருமாள் பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மீது பெண் மருத்துவரின் கார் மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

 

இந்த விபத்து தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் மருத்துவர் விபத்தை ஏற்படுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் தங்களை அலைக்கழிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Leave a Reply