உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு பத்து லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ள நிலையில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் பன்னிரெண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று புதிய உச்சத்தை எட்டியது. அதனையடுத்து அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 9 லட்சத்து 96 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. இதனால் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 4 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது.

 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10 லட்சம் கோடியை நெருங்கியதால் ப்ளூ பர்க்கின் உலக பணக்காரர்கள் பட்டியலில் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேநேரம் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply