காதலியை காண பாகிஸ்தான் வழியில் சென்ற இளைஞர் சிறைபிடிப்பு!

பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டார்கள். தெலுங்கானாவை சேர்ந்த பிரசாந்த் என்ற மென்பொருள் பொறியாளர் மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி துர்மிளால் ஆகியோர் கடந்த மாதம் பஞ்சாப் மாகாணம் பகவல்போரில் உள்ள ஷோலீஸ்தான் பாலைவன பகுதியில் பாகிஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

 

அவர்கள் இருவர் மீதும் சட்டவிரோத சட்டத்தில் கடந்த 14ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் எல்லை தாண்டி இருவரும் முயற்சி செய்துள்ளனர். ஹைதராபாத் மின்பொறியாளர் பிரசாந்த் துருக்கியில் உள்ள தனது காதலியை சந்திக்க பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வழியாக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

 

ஆனால் மத்தியபிரதேச விவசாயி தெரியாமல் எல்லை கடந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருவருமே முறையான சட்ட நடைமுறைகளுக்கு பிறகு இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply