கார் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி

கோவை அருகே கார் மீது இரு சக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோவை மதுக்கரை மரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் நேற்று காலை உறவினர் பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார்.

 

குவாரி ஆபீஸ் அருகே இருசக்கர வாகனம் சென்றபோது கார் ஒன்று சாலையின் குறுக்கே வந்தது. இதனால் இருசக்கர வாகனத்தை ஜெகநாதன் நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் வாகனத்தை நிறுத்த முடியாமல் இருசக்கர வாகனம் கார் மீது மோதியது.

 

இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்த ஜெகநாதன் மற்றும் பள்ளி மாணவியை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஜெகநாதன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பள்ளி மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Leave a Reply