தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!
நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் எதிரொலியாக, நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், திருச்சி, நாமக்கல், தேனி, தென்காசி, திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
ஏனைய தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




