பாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்!

சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி அருகே இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய மாநில அரசுகளை குற்றம்சாட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

காலம் காலமாக வன்கொடுமை நிகழும் இடமாக ஐ‌ஐ‌டி இருந்து வருவதாகவும் குற்றம் சாட்டினர். தொடர்ந்து ஐஐடி நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.


Leave a Reply