கோவாவில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது; ரஜினிக்கு சிறப்பு விருது!!

கோவாவில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியது. இந்த விழாவில் ரஜினிக்கு ஜகான் ஆப் கோல்டன் ஜுப்ளி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 50-வது ஆண்டு விழா என்பதால் பொன் விழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதனால் இந்திய சினிமாவுக்கு முக்கியப் பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞர்களை கவுரவிக்க முடிவு செய்த மத்திய அரசு, நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவித்திருந்தது.

 

இந்த விழா இன்று தொடங்கி வரும் 28-ந் தேதி வரை 8 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.. இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து கொண்டாடும் இந்த சர்வதேச திரைப்பட விழா தொடக்க விழா மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்றது பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.

 

தொடர்ந்து 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதான ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி எனும் சிறப்பு விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு இந்த விருதை வழங்கினர்.

 

விருது பெற்ற ரஜினி பேசுகையில், விருது பெற்றதில் மகிழ்ச்சி. இந்த விருதுக்கு தேர்வு செய்த மத்திய அரசுக்கு நன்றி. திரையுலகில் என்னை ஆளாக்கிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் என்னை வாழவைத்த தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என ரஜினிகாந்த் பேசினார்.


Leave a Reply